பொன்னேரி, பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல் நிலைய காவல்துறையினர் அவரைக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

மேலும் செல்லக்கிளி தெரிவிக்கையில் சாதியை ஒழிக்க வேண்டும் எனவும், சாதியை ஒழித்தால் மட்டுமே அனைவருக்குமான சமமான கல்வி மற்றும் வேலை உள்ளிட்டவைகள் கிடைக்கும் எனவும், அதற்கு தடையாக சாதிய இட ஒதுக்கீடு இருப்பதால் மேலும் சாதி வளர்ந்துக்கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பி இன்று காலை முதல் மாலை வரை ஒருநாள் அடையாள உண்ணாவிதம் இருக்கப் போவதாக தெரிவித்து கையில் சாதிய இட ஒதுக்கிட்டிற்கு எதிரான பதாகையை கையில் ஏந்தியப்படி பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு எதிராக அமர்ந்து போராட முற்பட்டார்.

மேலும் இப் போராட்டம் தொடர்பாக அவர் பொன்னேரி காவல் நிலையத்தில் முன் அனுமதி எதுவும் வாங்காததால் அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு பொன்னேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here