புங்கத்தூர், சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அம் மாவட்டச் செயலாளர் தேவா மற்றும் தலைவர் பிரேம்  தலைமையிலும் 75 வது குடியரசு தினவிழா, அன்னை சாவித்திரி பாய் இரவுப்பள்ளி திறப்பு விழா மற்றும் ஜெய்பீம் மாடல் விளக்க கூட்டம் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா புங்கத்தூரில் நடைப்பெற்றது.

அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்துக் கொண்டு அண்ணல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னை சாவித்திரி பாய் இரவு பள்ளியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவிக்கையில் ….

தேர்தலின் போது ஈ.வி.எம் மெஷின்களை பயன் படுத்துவதுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆம்ஸ்ட்ராங்க் பதிலளிக்கும் போது, வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ஜெர்மன் ஜப்பான்  பிரான்ஸ் ஆகிய நாடுகளில்  வாக்குச்சீட்டு சீட்டு முறைதான் தற்போது இருந்து வருவதாகவும், மேலும் ஜெர்மன் நாட்டில் நீதிமன்றமே மனிதனால் உருவாக்கப்படும் ஈவிஎம் மிஷினால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் அதனால் வாக்கு சீட்டு முறையே சிறந்தது என கூறியுள்ளதாகவும் அவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் ஈ வி எம் மெஷின் இருக்கும் வரை பிஜேபி ஆட்சி செய்யும் எனவும், மீண்டும்  வாக்குச் சீட்டு முறை வந்தால் மட்டுமே இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்த அவர் தேர்தலை முன் வைத்தே ராமர் கோவிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். ஆனால் எங்களை பொருத்தவரை ராம் என்றால் அது கன்சிராம்தான் என்றார்.

மேலும் எதிர் வரும் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி   தனித்து போட்டியிடுவதால் அது பாஜகவுக்கு சாதகமாக  இருப்பதாக   சிலர்  விமர்சனம் செய்து வருவதாகவும், ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி, பீகாரில் நிதீஷ் குமார் யாதவ், பஞ்சாப் அரவிந்த் கெஜ்ரிவால்  என அவர்களும் தனித்தேதான போட்டியிடுகிறார்கள் என்றார்.

செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், மதம் என்பது தனி மனித ஒழுக்கத்திற்கு தேவை எனவும், மேலும் அதை அரசியலுக்காக கோட்பாடாகவும், கொள்கையாகவும் கடைப்பிடித்து   பயன்படுத்தினால் அது நமது நாட்டுக்கு பெரிய ஆபத்தாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்பதால் ராமர் கோவில் விழாவிற்கு பகுஜன் சமாஜ்  கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை எனவும் அனைவரும் சகோதரத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார்.

செய்தியாளர்கள் தொடர்ந்து அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் எனவும் மேலும், தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் எனவும் அப்போது தெரிவித்தார்.

உத்திரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்தால் முதல்வராக   மாயாவதி வருவார் எனவும், ஆனால் அது போன்ற அரசியல் தேவை பகுஜன் சமாஜ் கட்சிக்கு இல்லை எனவும், மக்கள் தீர்மானிக்கும் அரசியல்தான் தமக்கு வேண்டுமென மாயவதி முடிவு செய்துள்ளார் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

குடியரசு நாள் என்பது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் என்பது கூட பல கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் இருப்பதாகவும், அந்நாளில் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் திருவுருவப்படம் வைத்துக் கூட யாரும் மரியாதை செலுத்துவதில்லை எனக்கூறினார்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா தெலுங்கானா கர்நாடகாவில் அம்பேத்கருக்கு மிகப்பெரிய சிலை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், தற்போது நாட்டிலுள்ள மைனாரிட்டி மக்கள் அம்பேத்கர் யார் என்று தெரியாமல் இருந்து வருவது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடியது ஆனால் அரசியலே தெரியாதவர்களும், மக்களிடம் பழகாத நபர்களும்தான் இன்று அரசியலுக்கு வருகின்றனர். விஜய் வந்தாலும் வேறு  சினிமா நடிகர்கள் வந்தாலும் அது நாட்டிற்கு  பேராபத்தை விளைவிக்கும் என அவர் கூறினார்,

மக்களின் அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் நாட்டில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட கூடும் எனவும் அவர் தெரிவித்தார். அப்போது திரைப்பட நடிகர் சாய் தீனா, மற்றும்  கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் அவருடனிருந்தனர்.

பேட்டி

ஆம்ஸ்ட்ராங்க்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here