திருவள்ளூர், சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணயன் தலைமையில் நடைப்பெற்றது. அதில் அரசால் நிறைவேற்றித் தரப்படாத அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் தெரிவிக்கும் போது தொடர்ந்து அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வருவதாகவும், மேலும் அது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க நான்கு முறைகளுக்கு மேல் முயன்றும் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனாதால், எதிர்வரும் பிப் 9 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சமாதியில் எங்களது கோரிக்கை மனுவினை வழங்கிடவுள்ளோம் என தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இந்த திட்டத்தை அறிவித்த மத்திய அரசு மறு பரிசீலனை செய்வதற்கு உத்தரவிட்டது. பல்வேறு மாநில அரசுகளும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்துவதாக அறிவித்துள்ளது இச்சூழ் நிலையில், தமிழக அரசு உடனடியாக அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு பழைய பஞ்சாங்க திட்டத்தை அமல்படுத்த வேண்டும் யாருக்கெல்லாம் பென்ஷன் இல்லையோ அவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. பத்தாயிரம் இருக்க வேண்டும்

அரசு பணியாளர்களில் 5 லட்சம் பேருக்கு தொகுப்பூதிய மதிப்பூதியம் அவுட்சோர்சிங் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த ஊதியம் மாதம் மாதம் கிடைப்பதில்லை. சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியமே வழங்கப்படுகிறது. இதனை விநியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை போக்குவதற்கு ஏதுவாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தனித்துறையை அறிவிக்க வேண்டும் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்களை பொட்டலங்களாக சரியான எடையில் வழங்க வேண்டும். அவர்கள் மக்கள் நல பணிகளை சிறப்பாக செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதை மாற்றி ஒரு கார்ட்டுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு விடுத்தனர்.

தொழிற்சங்க  சட்டப்படி 480 நாட்கள் பணியாற்றினால் அவர்களை பணி நிறைந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்க சட்டம் சொல்கிறது. தமிழ்நாடு அரசு அதனைச் செயல்படுத்துவதில்லை, அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்திலேயே டாஸ்மாக் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி நிலம் முழுவதும் ஆறு வண்ண ஆடைகள் சீருடையாக அணிந்து சென்னைக்கு சென்று கடந்த நான்கு முறை தமிழக முதல்வரை சந்திக்க இயலாத காரணத்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் எங்களது கோரிக்கைகளை வைக்க சங்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கு.பாலசுப்பிரமணியன் சிறப்புத்தலைவர்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here