திருவாரூர், டிச. 26 –

திருவாரூர்  வர்த்தக சங்க  கட்டிடத்தில் இன்று நடைபெற்ற திருவாரூர் மாவட்ட கிராம தொழில் முனைவர் சங்க பயிலரங்கில் டிஜிட்டல் சேவை  தொடர்பான  செயல்  விளக்கங்கள்  அளிக்கப்பட்டது. மேலும் CSC  அலுவலர்கள்  வெங்கட்ரமணன்,  அருள்செல்வன்,  கிரிதரன்,  பிரஷாந்த் ஆகியோர் தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கிராம தொழில் முனைவோர் சங்க  சார்பில் டிஜிட்டல் சேவையில் சிறப்பாக சேவை செய்த கிராம தொழில் முனைவோர்களுக்கு நினைவு  பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்க நிர்வாகிகள்  சுரேந்தர், ரவிசங்கர், கோவிந்தராஜ், இராம மணிகண்டன் ஆகியோர் வெகுச் சிறப்பாக  செய்திருந்தனர். மேலும் இப்பயிலரங்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  200 மேற்பட்ட கிராம தொழில் முனைவோர்கள்  பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here