சோழவரம், டிச. 26 –

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்றபடுத்திருந்தது.

இந்நிலையில் ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த உயிரிழந்த இரு சகோதரர்களின், உயிரிழப்பிற்கு அரசு இழப்பீடு வழங்க கோரி பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் உழைப்போர் உரிமை சங்கம், இடது தொழிற்சங்க மையம் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சோழவரத்திலிருந்து கன்னியம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தகவலறிந்து அச்சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் குழந்தைகளின் பெற்றோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் இறந்த எங்களது குழந்தைகளுக்கு இதுவரையில் அரசு தரப்பில் எந்தவித உதவியும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மேலும் அதனால் பெரும் துக்கத்தில் உள்ள தங்களால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தங்களால் பணிக்கு செல்ல முடியாமல், வாழ்வாதாரம் இழந்து, கடுமையான வறுமையில் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டறிந்த வட்டாட்சியர், அவர்களின் கோரிக்கைக் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்  போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்,

அதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் அச்சாலை மறியல் போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here