திருவாரூர், டிச. 19 –
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் நேற்றைய தினம் 18-12-23 கோயம்புத்துரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் நகராட்சி, வார்டு எண் 18,19,20,21,22 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்திடும் வகையில் அனைத்து துறையினரும் ஒரே இடத்தில் முகாமிட்டு கோரிக்கைகளை பெற்று அதற்கான தீர்வினை வழங்கிட ஏதுவாக இந்த முகாம் நடைபெறுகிறது.
மேலும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் சான்றிதழ் தேவைப்பட்டால் முகாம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளும் அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை முகாம் நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினர். மேலும், நேற்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மன்னார்குடி நகராட்சி, வார்டு எண் 1,2,3,13,14,15 க்குட்பட்டவர்களுக்கு கேஜி திருமண மண்டபத்திலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வார்டு எண் 1,2,3,4,16க்குட்பட்டவர்களுக்கு அங்கை மஹால் திருமண மண்டபத்திலும், கூத்தாநல்லூர் நகராட்சி, வார்டு எண் 3,4,5,6,7,8க்குட்பட்டவர்களுக்கு செல்வி மஹால் திருமணமண்டபத்திலும், நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ராஜா ராணி திருமண மண்டபத்திலும், குடவாசல் பேரூராட்சிக்குட்பட்பட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் திருக்குளம் தென்கரை மலர் மஹால் திருமண மண்டபத்திலும் மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.























