கும்பகோணம், டிச. 08 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு அப்போது அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் மகாராஜபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்பவராவர். இவருடைய மகன் அசோக்ராஜ் (27) திருமணம் ஆகாதவர் எனவும் மேலும் அவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி காணாமல் போன அசோக்ராஜ், போலி சித்தவைத்தியர் கேவசமூர்த்தியிடம் ஆண்மை குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்தததுள்ளார். அதனையடுத்து சோழபுரம் காவல்துறையினர் கேசவமூர்த்தியிடம் விசாரணை மேற் கொண்டதில், அசோக்ராஜிடம் தான் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது அவருக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தை சாப்பிட்ட பின்னர் சற்று நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தவர் உயிரிழந்ததாக கருதி அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்ததாகவும் கேவசமூர்த்தி அப்போது போலி சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதுப்போன்று சோழபுரம் ஆட்டோ ஓட்டுனர் முகமது அனஸ் என்பவரையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் கொலை வழக்கினை மிகவும் மெத்தனமாக திருவிடைமருதூர் காவல்துறையினர் கையாண்டு வருவதாகவும், அதனால் அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மெத்தனப்போக்கை மேற்கொண்டு வரும் காவல் துறையை கண்டித்தும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் புதா. அருள்மொழி, உழவர் பேரியக்க மாநில செயலாளர் ஆலயமணி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காவல்துறை கண்டித்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா அருள்மொழி பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்த போது வழக்கை சரியாக விசாரிக்காத காவல்துறையை முதல் குற்றவாளி என்றும் 2வது குற்றவாளி கேசவமூர்த்தி, என்றும் குற்றவாளி கேசவமூர்த்தியை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும். பாதிக்கப்பட்ட அசோக் ராஜ் குடும்பத்தினருக்கும் முகமது அனஸ் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.