திருவாரூர், ஆக. 28 –
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் எழுச்சிமிகு கருத்தரங்கம் திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட பொருளாளர் புலிவலம் A.நியாசுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA, தமுமுக மாநில பொது செயலாளர் பேராசிரியர் J.ஹாஜா கணி,திமுக செய்தி தொடர்பாளர் ஜெ.கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், ஜீவா டுடே ஊடகவியலாளர் தோழர் ஜீவசகாப்தன், மாநில தலைமை பிரதிநிதி வெங்கலம் A.ஜபருல்லாஹ், தமுமுக மாநில செயலாளர் தைக்கால் I.முபாரக் ஆகியோர் பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்கள் குறித்து எழுச்சிவுரை நிகழ்த்தினார்கள்.
மேலும் அக்கருத்தங்கத்தில் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் L.தீன் முகம்மது, மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன், மாவட்ட பொருளாளர் புலிவலம் நியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் M. நைனா முஹம்மது, A. ஹாஜா அலாவுதீன், மாநில விவசாய அணி துணை செயலாளர் நவாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் H.ஆசஃப் கான், மாநில மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். கருத்தரங்க நிறைவில் நகர தலைவர் ஹாஜா நஜ்புதீன் நன்றிவுரை நிகழ்த்தினார்கள்.
























