திருவாரூர், ஆக. 26 –
திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன் அருகில் அமர்ந்து உணவருந்தினார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவினை இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் காணொலிக் காட்சியினை கண்டறிந்தனர். மேலும் இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள் ஒன்றிய பெருந்தலைவர் உமாபிரியா ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.





















