மீஞ்சூர், ஆக. 25 –

இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் தேரடி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் அதற்கான விரிவக்க தொடக்க விழா நடைபெற்றது.

அவ்விழாவில் பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில், மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், (கிராம ஊராட்சி) சந்திரசேகர், மீஞ்சூர் திமுக பேரூர் கழக செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வட்டாட்சியர் செல்வகுமார், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர் உள்ளிட்ட அவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் அப்பள்ளிக் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவினை பரிமாறி அத்திட்டத்தின் விரிவாக்க விழாவினை தொடங்கி வைத்தனர்.

மேலும் அப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவினையினை சுவைத்தும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்து உறுதி செய்தனர்.

மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம், நாலூர், வல்லூர், உள்ளிட்ட 55 ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, வல்லூர் தமிழரசன், அத்திப்பட்டு புருஷோத்தமன், அபூபக்கர்,நக்கீரன், துரைவேல் பாண்டியன், இளநிலை உதவியாளர் அன்பரசு, சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, வார்டு உறுப்பினர் காதர் பாஷா, உள்ளிட்டவர்களும் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் என திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here