பெரியபாளையம், ஆக. 25 –
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவினை இன்று பெரியபாளையத்தில் வெகு விமர்சியாக எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் முன்னதாக அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதியக் கொடியினை ஏற்றி வைத்து அக்ட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் பெரியப்பாளையத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுகுமார் தலைமையிலும், மாவட்ட அவைத் தலைவர் பாபுராவ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் சிவகுமார், ஒன்றிய பொருளாளர் அதிர்ஷ்ட பிரபாகரன் ஆகியோர் முன்னிலையிலும், அவ்விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டில்லி வருகைத் தந்து விழாவினை சிறப்பித்தார். தொடர்ந்து அவர் பெரியபாளையம், தண்டு மாநகர், பகுதிகளில் உள்ள அக்கட்சியின் கொடிக்கம்பத்தில் புதிய கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அக்கட்சி தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தூய்மை பணி செய்து வரும் பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி மேலும் 500. பேர்களுக்கு அறுசுவை நிறைந்த பிரியாணியினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், கோபால் ஆகியோர் வரவேற்றனர். மேலும் இந்நிகழ்வின் போது, சேகர், சௌந்தர், புஷ்பலதா நாராயண மூர்த்தி, வேலு, செல்வராஜ், மோகன், சரேஷ், பஞ்சாட்சரம், சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், கிரி பாபு, செந்தில்குமார், முருகானந்தம், ராமமூர்த்தி, சரத்குமார், சீனு, பாபு, சசிக்குமாரா, டில்லி, குமார் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளும் திரளான தொண்டர்களும் பங்கேற்றனர்.
முடிவில் வினோத் கலா நன்றி கூறினார்..


















