எண்ணூர், ஆக. 24 –

எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி வாழ் மீனவ கிராமங்களை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து, மீனவரின் இறப்பிற்கு நீதி கேட்டு சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை எண்ணூர் முகத்துவாரம் குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (30) மீனவரான இவர், வழக்கம்போல் நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக தனது படகில் சென்றவர், இன்று காலை வரை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், படகுகளில் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் மீன்பிடிக்க சென்ற படகு, கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆற்றில் குதித்து மாயமான விக்னேஷை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர் விக்னேஷின் உடல் சேற்றில் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது உயிரிழந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். அது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள். வடசென்னை அனல் நிலைய மூன்றாம் நிலையின் விரிவாக்க திட்டத்திற்காக கடலும், ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்திற்குச் செல்லும் மையப் பகுதியாகவும், மேலும் நீரோட்டம் நிறைந்த பாதையில் மண்ணை நிரப்பி சிமெண்ட் கலவையைக் கொண்டு உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால்தான் இவ்விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் இதுப் போன்ற சம்பவங்கள் அடிக்கடி அப்பகுதியில் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உயிரிழந்த மீனவர் விக்னேஷ் இறப்பிற்கு தமிழக மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை காரணம் என மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் எண்ணூர் – அத்திப்பட்டு இடையே ஆற்றின் குறுக்கே செல்லும் மேம்பாலத்தில் உயிரிழந்த மீனவர் விக்னேசின் உடலுடன் வரின் இறப்பிற்கு நீதிக்கேட்டும் மேலும் விக்னேசின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வலியுறுத்தியும், கோரிக்கை முழக்கங்களை எழுப்பி  200 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.

மேலும் அத்தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடத்திய அவர்களது பேச்சு வார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மீனவர்கள் நடத்திய சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நிலவி வந்த போக்குவரத்து பாதிப்பு சீரான நிலைக்கு வந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here