செவ்வாய்பேட்டை, ஆக. 12 –

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று, அக்கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்து, அவ்விருவர்களிடம் இருந்து, நகை, பணம் ஆகியவற்றை மீட்டனர். மேலும் அக்கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு, தப்பிவோடிய மேலும் சிலரை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேஷாராம் (25), நகை வியாபாரியான இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நகை கடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து நகை வியாபாரம் முடித்து கொண்டு தமது இரு சக்கர வாகனத்தின் உள்ளே நகை, பணத்தை வைத்து கொண்டு சென்னை சென்ற போது, தொழுவூர் என்ற பகுதியில் அவரது இரு சக்கர வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து, கத்தியால் இடுப்பில் குத்தியும், வலது கையை வெட்டியும், நகை, பணத்துடன் இரு சக்கர வாகனத்தை பறித்துள்ளது.

அப்போது வியாபாரி சேஷராம், தமது இரு சக்கர வாகனத்தின் சாவியை தராததால், கொள்ளையர்கள் வந்த வண்டியுடன் இந்த வண்டியையும் ‘டோ’ செய்து சென்றதாக தெரிகிறது. அப்போது செவ்வாய்பேட்டை சுடுகாடு அருகே  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செவ்வாப்பேட்டை காவல்  துறையினர்,  அவர்கள் டோக் செய்து வந்த அவ்வாகனத்தை மடக்கி விசாரணை நடத்திய போது, அவர்கள் அப்போது காவல்துறையினரிடம் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் அவ்விரு சக்கர வாகனத்தை திறந்து பார்த்துள்ளனர்.

மேலும், அதில் இருந்த ஒரு கிலோ தங்கம் மற்றும்  5 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்களை பிடிக்க முற்பட்ட போது, 3 இரு சக்க வாகனங்களில் அவர்கள் தப்பி சென்றனர். எனினும், அவர்களை தொடர்ந்து இடைவிடாமல், காவல் துறையினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்று 2 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும் மற்றவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனிடையே கத்தி குத்தால் காயமடைந்த சேஷாராமை மீட்ட செவ்வாய்பேட்டை காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு பகுதியை சேர்ந்த ஆதித்யா (19). மற்றும் சரவணன் (21)  என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தப்பியோடிய முகேஷ் (24), நாகராஜ் (23), விஜய் (24) உள்ளிட்டவர்களை செவ்வாப்பேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி  வருகின்றனர். மேலும் அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையையும் ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here