திருவாரூர், ஆக. 11 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சித்தாடி கிராமத்தில் தாத்தா கலியமூர்த்தி, தந்தை வெங்கடேசன் ஆகியோருக்கு பின் கடந்த மூன்று தலைமுறைகளாக அவ்வூரில் அவர்களுக்கு சொந்தாமன இடத்தில் வசித்து வருபவர் மணி என்பவராவர். இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தை சித்தாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.மணி என்பவர் அபரிக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
மேலும், அவர் அப்புகார் மனுவில், ஊராட்சி மன்ற தலைவருக்கு உடந்தையாக, அவ்வூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஊர் நாட்டாமை மாரியப்பன் உள்ளிட்ட பத்துபேருக்கு மேற்பட்டவர்கள் தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு, வீட்டில் உள்ளவர்களை தகாத வார்த்தையால் திட்டியும், மேலும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என மிரட்டி விட்டு சென்றாதாகவும் மணி அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அம்மனுவில், :தான் மூன்று தலைமுறையாக வசித்து வரும் இடத்தில் அரசு விதிமுறைகளின் படி, வங்கியில் கடன் வாங்கி, அங்கு வீடு கட்டி உள்ளதாகவும், அவ்வீட்டிற்கருகேயே ஊராட்சி மன்ற தலைவர் ஜி. மணியின் இடம் இருப்பதால், தனக்கு சொந்தமான இடத்தையும் அவர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவரளித்துள்ள புகார் மனுவோடு ஊராட்சி மன்ற தலைவர் ஜி. மணி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் மிரட்டிப்பேசிய ஆடியோவையும் இணைத்து வழங்கிவுள்ளதாக இடத்துக்கு சொந்தமான மணி தெரிவித்தார்.
முன்னதாக அவர் இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்த தாகவும், அப்புகார் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால்தான் இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற “பெட்டிஷன் மேளா”வில் தான் பங்கேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவருக்கு உடந்தையாக செயல்படுவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினருடன் புகார் மனு அளித்துள்ளதாக அப்போது தெரிவித்தார்.
பேட்டி: மணி
(வீட்டு உரிமையாளர்) சித்தாடி.