பொன்னேரி, ஆக. 11 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். அப்போது அவர் பணிப்புரியும் அப்பார்ட்மெண்ட் அருகில் உள்ள செப்டிக் டேங்கில் விழுந்து இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இதுக்குறித்து உடனடியாக அவர்கள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உடலில் காயங்களுடன் உயிரிழந்த ;இலையில் இருந்த சுப்பிரமணியனின் உடலை மீட்டனர்.
இதுக்குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவுள்ளனர். செப்டிக் டேங்கில் எதற்காக இறங்கினார், கட்டளையிட்டது யார் ? செப்டிக் டேங்கை சுத்தம் செய்யதான் உள்ளே இறங்கினாரா ? பாதுகாப்பு இன்றி உள்ளே இறங்கிய அவரை விஷவாயு தாக்கிதான் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் இறந்தாரா என்பது குறித்து விரிவாக பொன்னேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















