திருவாரூர், ஜூலை. 15 –

இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, திருவரூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் திருவாரூர் வட்டாட்சியர் எம்.நக்கீரன் தலைமையில் இவ்விழா வெகுச்சிறப்பாக அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவினை பெருந்தலைவர் காமராஜரின் பிந்தநாள், கல்வி வளர்ச்சிநாள் புதிய இலக்கிய மன்றம் திறப்பு விழா என முப்பெரும் விழாவாக அப்பள்ளி நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் தலைமையாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற திருவாரூர் வட்டாட்சியர் எம். நக்கீரன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மேலும் புதிய இலக்கிய மன்றத்தினை தொடக்கி வைத்தார்.

முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் பி அன்பழகன் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர். சந்திரா முருகப்பன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் முப்பெரும் விழாவில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் காமராசர் பிறந்த தின விழாவினை முன்னிட்டு அப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவி களுக்கும் பரிசுகளை வட்டாட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் செயலாளர் எம். இன்பராஜ் நிர்வாக அறங்காவலர் ஜி. முருகப்பன் பள்ளி முதல்வர் திருமதி. மலர்விழி இன்பராஜ், நிர்வாக மேலாளர் வீ. சின்னராஜ் உள்ளிட்டவர்களும் மாணவ மாணவியர்களின் பெற்றோர் எனத்திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here