மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும், நந்தியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் முன்னிலையிலும் அச்சிறப்பு முகாம் நடைபெற்றது,
மேலும் இன்று நடைப்பெற்ற அச்சிறப்பு முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், கடை எண் மாற்றம், பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, அக்கோரிக்கை மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது, இச்சிறப்பு முகாமில் அப்பகுதியைச் சார்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.























