திருவள்ளூர், ஜூன். 26 –

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையிலும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்குழுவின் தலைவருமான முனைவர் கே. ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய குழுத்தலைவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெறும் இந்த மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு எடுத்த முயற்சியால் பல தடைகள் உடைக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்றார்.

மேலும் கடந்த திஷாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அச்செயல்பாடுகளில் எவ்வித தொய்வும் இல்லாமல் செயல்பட சம்பந்ப்பட்ட துறை அலுவலர்களுக்கு திஷா குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம் நடைப்பெற்ற திஷா குழு கூட்டத்தில் 34 திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு, அத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.

மேலும் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் அத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை சரி செய்து,ம், திட்டங்களை முறைப்படுத்தி விரைவாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும், மேலும் பொதுமக்கள் அதனை முறையாக பயன்படுத்துவதற்கு தகுந்த வசதிகள் ஏற்படுத்தி தருமாறும் அவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் திஷா குழுத்தலைவருமான முனைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, திஷா குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன், நகராட்சியின் மண்டல இயக்குநர் ச.சசிகலா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை ) எபினேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here