கள்ளச்சாரயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தம்பு மற்றும் சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் .. மேலும் இவர்களை தொடர்ந்து தற்போது முத்து எனபவரும் உயிரிழந்துள்ளார்

செங்கல்பட்டு, மே. 16 –

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 8 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கருணை மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்த அன்றே உயிரிழந்தவர்கள் ஐந்து பேர், மேலும் அதனைத்தொடர்ந்து மேலும் ஐந்து பேர்கள் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், அம்மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த தம்பு (60) மற்றும் சங்கர் ஆகியோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து  மேலும், முத்து (62) என்பவரும் சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார். இதனால் இவ்விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here