சென்னை, மே. 07 –

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஈராண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு விழாவாக நடைப்பெற்றது. அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஒய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கும், அதுப்போன்று புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 10 மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளையும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில் ஐந்து பயனாளிகளுக்கு கேடயங்களையும் வழங்கிப் பாராட்டினார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கல்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வாயிலாக தமிழ்நாடு அரசு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயனித்து வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் மீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் தற்போது 34,62,092 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.

மேலும் தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர், உதவித்தொகைக்கான அனுமதிப்பெற்று காத்திருப்போர் பட்டியலில் 64,098 நபர்கள் இருப்பதாகவும் மேலும் புதியதாக 35,902 நபர்கள் என மொத்தம் ஒரு இலட்சம் நபர்களுக்கு மாதம் ரூ. ஆயிரமும், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு என பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி ஒரு இலட்சம் பயனாளிகள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணைப்பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில், விளிம்பு நிலையிலுள்ள ஒரு இலட்சம் ஏழை எளிய நபர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் இன்றைய தினம் பத்து பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

புதுமைப்பெண்திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கல்

 

இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்விக் கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில் நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச்சார்ந்தவராகவும் உருவாகிட கடந்தாண்டு 05.09. 2022 ஆம்தேதியன்று சென்னையில் நடைப்பெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராம்மிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்விப்பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதிமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை த் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகித த்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உருவாக்க இத்திட்டம் அப் பெண்களுக்கு நலமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை சுமார் 2,10,717 மாணவியர்கள் பயன் பெற்று வருகின்றனர் இத்திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு அரசு ரூ.121.18 கோடி அம் மாணவியர்களின் உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பத்து மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களைப் பாராட்டி கேடயங்கள் வழங்கல்

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில்துறையின் தேவைச் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க நான்முதல்வன் எனும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 01.03.2022 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுவரை சுமார் பதி மூன்று இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவுகளுடன் சேர்த்து, மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே இவ்வரசின் நான் முதல்வன் திட்டமாகும். மேலும் துறைச்சார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் பிரத்தியேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத்திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 பொறியியல் கல்லூரிகளில் 4,98,972 மாணவர்களும் 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,11,338 மாணவர்களும் பயனடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் அரசு தர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பில் இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.40 இலட்சம் வரையிலான ஊதியத்தில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பினை பெற்று தருவதற்கான முகாம்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

பொறியியல் கல்லூரிகளில் 2022 – 2023 ஆம் ஆண்டு நான்முதல்வன் திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு Siemens, Desalt, Micosoft, Ibm, Cisco Autodesk போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், மற்றும் L&T, Tcs, Infosys, Nse போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 59,132 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வேலை வாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதிவரை நடைப்பெறவுள்ளது.

கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் நான்முதல்வன் திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை நடைப்பெற்றுள்ள வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக 62,634 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் ஜூன் மாத இறுதிவரை நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், CII, TIDCO, SIPCOT, MSME, ELCOT, DISH, Employment, Startup TN, Guidance TN, NASSCOM போன்ற அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல இலட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் கல மற்றும் அறிவியியல், பொறியியல் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலை வாய்ப்பு பெற்ற பயனடைந்தவர்களில் ஐந்துநபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேடயங்களை வழங்கினார்.

இந் நிகழ்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை ஆமைச்சர் எஸ்.இரகுபதி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர் – கூடிதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here