திருவாருர், ஏப். 11 –
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதி தேர்வு நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்வு அட்டவணையை தயார் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் இன்றைய தினம் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வானது துவங்கியுள்ளது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான அனைவரையும் கடும் கோடைக்கால வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், மேலும் கொரோனா தாக்குதலும் அதிகரித்து வருகிறது.
மேலும் இதுப்போன்ற அசாதாரணமான சூழ்நிலையில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கல்விப் பயிலும் பிஞ்சு குழந்தைகளுக்கு முதலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கான திட்டமிடாமல் காலம் தாழ்த்துவது என்பது மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தாமை காட்டுவதாகவும், மேலும் அது பள்ளிக்கல்வித்துறையின் திறனற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துகிறதெனவும் திருவாரூர் மாவட்ட 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை கல்விப்பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இத்தேர்வு தேதிக் குறித்து மறுபரிசீலனை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
பேட்டிகள்:
- மகேஸ்வரி,
- ரேவதி
திருவாரூர்.





















