செங்கல்பட்டு, ஏப். 08 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான இரயில் பயணிகள் வந்துப்போகும் இடமாகும்.
மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து இரயில்களும் அந்நிலையத்தை கடந்தே செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த இரயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் கொண்ட இரயில்வே நிலையமாக இருந்து வருகிற்து.
இச்சூழலில், செங்கல்பட்டு இரயில் நிலைய பெயர் பலகையை முழுமையாக தனியார் தங்க நகை கடை விளம்பரத்தால் அப்பலகையை முழுமையாக ஆக்கிரமித்தும், மேலும் இரயில்வே நிலையத்தின் பெயரை நிபந்தனைக்கு உட்பட்டது என்பது போன்ற வாசகத்தின் அளவில் அதனருகே தாங்கி நிற்பது, இரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் பெயரை விட பளிச் என கண்ணில் படுவது அவ்விளம்பரப் பலகைதான் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விளம்பர பலகைக்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே தனியார் தங்கநகைகடை விளம்பர பலகையை உடனே அகற்ற இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.