திருவாரூர், ஏப். 08 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் கோட்க்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் அவ்விழாவிற்கு வந்த அவருக்கு திரளான அக்கட்சித் தொண்டர்கள் பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவித்தும் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக ஆர் காமராஜ் திறந்து துவக்கி வைத்தார்..
மேலும் இக்கோடைக்கால நீர்மோர் பந்தலில், தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான நீர் மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் தாகம் தீர முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராம. குணசேகரன், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி. ஜி அன்பு, நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, நன்னிலம் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல் சரவணன், சுவாதி கோபால் மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட் திரளான அப்பகுதி பொதுமக்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.























