பாபநாசம், ஏப். 04  –

பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்ட தலைவர் முருகையன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.கலியமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் ஜி.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தினை அரசே ஏற்று  நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கூட்டத்தின் நிறைவில் வட்ட பொருளாளர் திவ்யநாதன் நன்றிவுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here