சென்னை, மார்ச். 29 –
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் முன்பு கடையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கடையின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேலே வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் முன்பு டிப் டாப்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடை அணிந்தபடி வரும் இளைஞர் ஒருவர் போனில் பேசுவது போல பேசிக்கொண்டு இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா என்றவாறு சிறிது நேரம் நோட்டமிட்டு, தொடர்ந்து தான் கொண்டு வந்த கள்ளச் சாவியை போட்டு சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்கிறார்.
இக்காட்சிகள் அனைத்தும் ஓட்டலின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிவுள்ளது. இதுக்குறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்புகாரின் பேரில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





















