கும்பகோணம், மார்ச். 17 –
மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான நகையை அந்நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளார். மேலும், இதுப்போன்று, கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்த ரேவதி 10 பவுன் நகையையும், திலகவதி என்பவர் 2 பவுன் நகை உள்ளிட்ட மேலும் 10 க்கு மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 60 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளை இந்நிறுவனம் நடத்திவரும் பெனிபிட் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் பணத்தை கொடுத்து நகையை மீட்க வரும் போது, நீங்கள் அடமானம் வத்திருக்கும் நகைகள் இங்கு இல்லை எனவும் மேலும், 2 நாட்களுக்கு பின் இங்கு வாருங்கள் என்றவாறு அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்ததாகவும், மேலும் நகை மீட்பது தொடர்பாக அவர்கள் அனைவரும் தொடர்ந்து சுமார் நான்கு மாதங்களாக அந்நிறுவனத்தால் வீண் அலைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் அந் நிறவனத்தில் நகைகளை அடமானம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதனால் தங்கள் நகைகளை அந்நிறுவனத்தில் வைத்து விட்டு மீட்க முடியாத நிலையில் இருந்த அவர்கள் அனைவரும் ஒன்றுத்திரண்டு இன்று அந்நிறுவன வாசல் முன்பு அமர்ந்து எங்கள் நகை வரும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனவும் மேலும் அதுவரை மூடவிட மாட்டோம் என ஆவேசமாக முழக்கமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களிடமும் தொடர்ந்து தாங்கள் அடமான வைத்த நகையை உடனே தாருங்கள் என்றவாறு அவர்கள் அனைவரும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், இத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், மோகன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் அடகு வைத்த நகையே நாங்கள் மீட்டு தருகிறோம் என அவர்களிடம் உறுதியளித்ததின் பேரில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
மேலும் இதுக்குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடும்ப தேவைக்காக அவசரக் கால கட்டத்தில் நகைகளை அடகு வைத்து, அதை மீட்க அவதிப்படும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர்களின் மனவேதனையையும், மேலும் பாதுகப்பற்ற மனநிலையோடு அவர்கள் புலம்பிச் செல்லுவதையும் கேட்க முடிந்தது.