ஆரணி, மார்ச். 16 –
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிபிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக நடைப்பாதையில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூமாலை மற்றும் பூஜைபொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக தற்காலிக விற்பனைக் கூடங்களை அமைத்து அப்பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்திட செவ்வாய் கிழமைத் தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுகளில் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவதால், இக்கோயிலின் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் பக்தர்கள் கூட்டத்தினால் தள்ளு முள்ளும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், நடப்பாதை மற்றும் கடை வியாபாரிகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதுக்குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் இத்திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் அப்புகார் மனு தொடர்பாக இதுவரை வியாபாரி மற்றும் அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்பது தற்போது வரை உள்ள நிலைமையாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் சார்பாக அதன் செயல் அலுவலர் செந்தில்குமார் மீண்டும் காவல்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் நடைப்பாதையில் பொருட்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், வியாபாரிகள்யில் ஆலயம் அருகே வியாபாரம் செய்யும் சிறுகடை வியாபாரிகள், மற்றும் கூடை வியாபாரிகளுடான ஆலோசனை கூட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் நடைப்பாதை வியாபாரிகள் மற்றும் கூடை வியாபாரிகளினால், எதிர் வருகின்ற செவ்வாய்கிழமைகளில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சுமூகமாக வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், மேலும் மீண்டும் இதுப்போன்று பிரச்சனை ஏற்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.






















