மாங்குடி, மார்ச். 11 –

திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும், வங்கியில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கனேஷ் கூறியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று  ரசீது கொடுக்க வேண்டும் என செந்தில்குமார்  போதையில் பேசியதாகவும் அதன் பிறகு   தகாத வார்த்தைகளில் திட்டியும் அடிக்கவும் முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்பொழுது அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் அவரை வெளியில் அனுப்பி உள்ளார்கள் . இந்த காட்சிகள் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்துள்ளார்

கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சினைக் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here