பொன்னேரி, பிப். 25 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அச்சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் சுபத்ரா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேடவாக்கம் பிரபாகரன், வில்வம் ஏகாம்பரம், வழக்கறிஞர் அம்பிகாபதி, ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இதில் பொதுமக்களுக்கு தேவையான குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் அவர்களோடு நாராயணன், ரவி, சேகர், சுந்தர், மற்றும் கூட்டுறவு நிர்வாகிகள் பொதுமக்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here