திருவள்ளூர், பிப். 24 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,

மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர் சிரஞ்சீவி, அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், உள்ளிட்டோர்கள் தலைமை வகித்தனர்.

மேலும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் இவ்விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் கலந்துக்கொண்டு புற காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களை தடுக்கவும், போக்குவரத்தினை முறைப்படுத்திடவும், மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்திட இப்பகுதியில் புதிய புறநகர் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும், இதில் தயார் நிலையில் 10 காவலர்கள் எப்பொழுதும் பணியாற்றுவார்கள் என்றும் தெரியவருகிறது.

மேலும் பொதுமக்கள் எந்த வித பிரச்சனைகள் இருந்தாலும் உடனே இந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என இந்நிகழ்வின் போது ஆவடி ஆணையரக ஆணையாளர் உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மீஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, போக்குவரத்து வெற்றிவேல். ஊராட்சி செயலர் பொற்கொடி முருகானந்தம், வார்டு உறுப்பினர் கோமதிநாயகம்.அத்திப்பட்டு ரவி. உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here