அத்திப்பட்டு, ஜன. 13 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் மற்றும் கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில், மாவட்ட சிறப்பு தணிக்கை அதிகாரி பால்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரம்யா, துணை அலுவலர்கள் சக்திவேல் .நசியா, சதீஷ் மற்றும் தங்கமணி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இவ்வூராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு 100 நாள் வேலை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து பணிக்குறித்த குறைக்கேட்பு நிகழ்வும் நடைப்பெற்றது.
மேலும், அதனைத் தொடர்ந்து ஊராட்சியின் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் போது வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், பரிமளம். சந்தியாமூவேந்தர் உள்ளிட்டவர்களும், மற்றும் திரளான அக்கிராம பொதுமக்களும் பங்கேற்று இவ்விழா சிறப்பாக உறுதுணை நிகழ்த்தினார்கள்.