கும்பகோணம், டிச. 01 –
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்திருந்தது. இது தவிர மேலும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூபாய் 300 கோடிக்கு மேல் கடன் பெற்றது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. மூடப்பட்ட சர்க்கரை ஆலையை கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் சீரமைப்பு பணிகளை தொடங்கிய போது அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு உங்களது பணியை தொடங்குங்கள் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கால தாமதம் இன்றி உடனே வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் 2வது நாளாக இன்று காலை ஆலை முன்ங காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தங்ககாசிநாதன். மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் எலியை வாயில் கவ்வியப்படி, சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன முழக்கமிட்டனர்.
மேலும், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஆலை நிர்வாகத்தினர் என பல தரப்பினரும் கரும்பு விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், கரும்பு விவசாயிகள் ஆலையின் முன்பு உணவு சமைத்து உண்டு, உறங்கி 2ம் நாளாக தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி. 1)
அய்யாகண்ணு..
மாநிலத் தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்..
பேட்டி.. 2)
தங்ககாசிநாதன்..
மாநில செயலாளர்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்..
பேட்டி. 3)
செந்தில்குமார்,
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்..






















