மீஞ்சூர், செப். 28 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக அரசு கிராமப்புறங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதத்தில் ஊராட்சிகள் தோறும் மரங்கன்றுகளை நட்டு அவற்றினை அவர்களே பராமரித்து பசுமையான கிராமமாக உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளது.
அதன் பொருட்டு இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்வின் ஜான் வர்கீஸ் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஊராட்சிகளில் மரங்களை நடுவதற்கான ஏற்படுகளை துரிதப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து அப்பணி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் எம் டி ஜி கதிர்வேல், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் அர்ச்சனா உதயகுமார், வார்டு உறுப்பினர் கோமதிநாயகம். ஊராட்சி செயலர்பொற்கொடி. உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக அத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 300 மரக்கன்றுகளை நடப்பட்டு இந்நிகழ்வு தொடங்கியது.
மேலும் இந்நிகழ்வில் துளசிபாய் தங்கமணி, ஜோதி, பிரபா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் மற்றும் திரளான கிராம பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்று இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.