கும்பகோணம், செப். 17 –

கும்பகோணத்தில் இன்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், திரளானவர்கள் பங்கேற்று அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடித்தும் மரியாதை செலுத்தினார்கள்.

1987ம் ஆண்டு தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி நடைப்பெற்ற போராட்டத்தில்  கோவிந்தன், ரெங்கநாதன், ஏழுமலை, வேலு, சிங்காரவேலு, விநாயகன், முனுசாமி, அண்ணாமலை, தேசிங்கு, கோவிந்தராஜ், குப்புசாமி, முத்து, ஜெனார்த்தனன், முனியன், ராமகிருஷ்ணன், மயில்சாமி, சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்ட 21 வன்னியர் சங்க போராளிகள் உயிர் இழந்தனர்.

அதன் பொருட்டு அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில், 35 வது ஆண்டை முன்னிட்டு வன்னியர் சங்கம் மற்றும் பட்டாளி மக்கள் கட்சி சார்பில், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம க ஸ்டாலின் தலைமையில்  காந்தி பூங்கா எதிரே, 21 வன்னிய சங்க போராளிகளின் திருவுருவப்படங்களுக்கும் மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், 2 நிமிடம் மவுனம் அஞ்சலி  செலுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் வன்னியர் சங்க நகர செயலாளர் என் கே பி பாலகுரு மாவட்ட பொறுப்பாளர் மதி விமல் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ் மற்றும் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பேட்டி : ம.க ஸ்டாலின், மாநில துணை தலைவர்

வன்னியர் சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here