காஞ்சிபுரம், ஆக. 29 –
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் – ஹேமலதா தம்பதிகள். பொறியாளர்களாக பணி புரிந்து வரும் இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற இரண்டரை வயதில் மகன் உள்ளான்.
ஓடி விளையாடி மகிழ்திருக்க வேண்டிய வயது பருவத்தில் உள்ள யஷ்வந்த் பெற்றோர்களின் உதவியாளும், அவரது புத்தி கூர்மையாலும், ராணுவத்திலும் விமானிகளும் பயன்படுத்தக்கூடிய 26 சங்கேத குறியீடு சொற்களை, 36 நொடிகளில் பிழையின்றிக் கூறி அசத்தி உள்ளார்
இச்சிறுவனின் சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரண்டு சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
மேலும் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் 42 தலைப்புகளை கூறியும், 17 நொடிகளில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை வரைபடத்தில் சுட்டிக்காட்டி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் தனது சாதனையை பதிவு செய்து இடம் பிடித்துள்ளார்.
இச்சுட்டிக் குழந்தையின் சாதனையை பல தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறித்து அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குழந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக குழந்தை யஷ்வந்தையும், அவனின் பெற்றோர்களான சுதாகர், ஹேமலதா ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி, பரிசுகளை வழங்கி, மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்திட வாழ்த்து தெரிவித்தார்.