திருவள்ளூர், ஆக. 22 –
திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தோற்றம், வரலாறு, கட்சிப் பணிகள் குறித்து மாநில மகளிரணி செயலாளர் எச்.ஸ்டெல்லாமேரி விளக்கவுரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் ராஜா உரை நிகழ்த்தும் போது, பழவேற்காடு பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர முகத்துவாரம் விரைவில் அமைத்து தர வேண்டும் எனவும் மினி ஹார்பார் (சிறு துறைமுகம்) பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் இதன் மூலம் பழவேற்காடு கடலிலும் ஏரியிலும் வாழ்வாதாரம் குறைந்து மீனவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்த முடியும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், இதனால் ஏற்படும் கடல் அரிப்பினை தடுப்பதற்கு காசிமேடு ராயபுரத்தில் உள்ளது போல் கடற்கரையில் கற்களைக் கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வஞ்சிவாக்கம் விக்ரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி மைக்கேல், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஏலியம்பேடு ஜெயசீலன், மீஞ்சூர் ஒன்றிய மீனவர் அணித் தலைவர் ரமேஷ், மீனவர் அணி பொருளாளர் விஷ்ணு, மீஞ்சூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கானா கமல், வல்லூர் ஜெகன், சோழவரம் ஒன்றிய நிர்வாகிகள் வசந்த், சந்தீப், சண்முகப்பிரியன் உள்ளிட்ட புரட்சி பாரதம் கட்சி திர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் பொன்னேரி நகர செயலாளர் கோகுல் நன்றியுரை நிகழ்த்தினார்.