மீஞ்சூர், ஆக. 17

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 – 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா நடைப்பெற்றது.

இவ்விழா மீஞ்சூர் அனைத்து வியாபாரிகளின் சங்கத் தலைவர் பாலச்சந்திரபாபு தலைமையில் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.  மேலும் இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் கவுண்டர்பாளையம் சீனிவாசன் மற்றும் ஏழுமலை முன்னிலை வகித்தனர். செயலாளர் ஷேக்அகமது அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், செங்குன்றம் உதவி காவல் ஆணையர் எஸ்.முருகேசன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அவ்விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் தமிழகத்தில் நடைப்பெறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பட்டியலில் மீஞ்சூர் வட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும், பள்ளிகளுக்குச் செல்லும் பொழுது அதிக கவனத்துடன், பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியும், மேலும் அடுத்த ஆண்டிலும் சிறப்பாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக பரிசுகள் வழங்கபடும் எனவும் கூறினார்.

இதில் வட்டாரத்தில் அடங்கிய அனைத்து பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடிக்கு மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது .இதில் நாலூர் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் ரகு, செயலாளர் அயூப்கான், பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் டேவிட்ராஜ் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here