திருவள்ளூர், ஆக. 03 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில்  தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அரிசி ஆலை மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மே 1 தேதி அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் இப்பிரச்சினை சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை கழிவுகளை  கட்டுப்படுத்த  ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இது வரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்.

தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் கரும் புகை மற்றும்  நெல் கொதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் துர்நாற்றம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அதேப் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ரமேஷ் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒட்டுமொத்த கிராமத்தினரும் ஒன்று கூடி முடிவெடுத்து சாலைமறியலில் ஈடுபடபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here