இராசிபுரம், ஜூலை. 20 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர உள்ளனர்.
இருவரும் ராசிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேலை முடித்து பட்டணம், பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65) என்பவர் பட்டணம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பட்டணம் அடுத்துள்ள சக்தி நகர் அருகே, எதிரில் வந்த போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது.
இதில், ஹரிபாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பின்னால் அமர்ந்து வந்த கோடீஸ்வரன், எதிரே வந்த செல்வராஜ் ஆகிய இருவரும், லேசான காயத்துடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துக் குறித்து, ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




















