கும்பகோணம், ஜூலை. 09 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றம் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தற்காலிக தேர்தல் குறித்த அறிவிப்பு அட்டவணையை கடந்த ஜூன் 20 – 2022 ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் தேர்தல் நடைப்பெறுவதற்கான நாள் ஜூலை 9 – 2022 ஆம் தேதியன்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 27 தொடங்கியது தொடர்ந்து மறுநாளான ஜூன் 28 ல் வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூன் 30 தேதி என்றும், மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூலை 12 – 2022 அன்று நடைப்பெறும். தொடர்ந்து உள்ளாட்சித் தற்காலிக தேர்தல் முடிவுகள் வரும் ஜூலை 14 – 2022 வர இருக்கிறது.
அதன்படி கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பிரியாவும், அதிமுகவைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவரும் போட்டியிடுகின்றனர். இவ்வார்டில் மொத்தம் 248 வாக்குகள் உள்ளது. மேலும், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குச்சாவடியில் காலை 9 மணி நிலவரப்படி 99 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






















