கும்பகோணம், ஜூன். 20 –

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில்  நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில், வழக்கறிஞர் சங்க உறுப்பினரான, வழக்கறிஞர் சுந்தரை வெட்ட முயன்ற நபர்கள் குறித்து சுவாமிமலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை இதனை கண்டித்தும், ஒரு மோசடி புகார் குறித்து வழக்கறிஞர்கள் சங்க விசாரணைக்கு ஆஜராக மறுத்ததுடன், வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி அவமதித்து, கொலை மிரட்டல் விடுத்த, வழக்கறிஞர்கள் பூம்பொழில், ராஜசேகர் ஆகியோர் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனவே இதனை கண்டித்தும்,  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள், சங்க தலைவர் ராஜசேகர் தலைமையில்,நீதிமன்றம் முன்பு திரண்டு, கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பேட்டி : எம் ராஜசேகர், தலைவர், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here