சென்னை, ஜூன் 03 –
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன்பிறப்பே…’என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர் இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் – தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்’ கலைஞரைப் போற்றினேன். என அவர் சுமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.



















