விருதுநகர், ஜூன். 02 –

விருதுநகர் மாவட்டம், மருளூத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சூலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள மையங்களில் நேற்று பள்ளக்கல்வித்துறையின் மூலம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பு திறனை மேம் படுத்துவதற்காக வாசிப்பு மாரத்தான் என்ற செயலி மூலம் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இதில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துக்கொள்ள வாய்ப்பு குறைவாக இருந்தது. அதன் காரணமாக மாணவர்களிடையே கற்றல் திறனில் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் தமாணவர்களின் வாசிக்கும் திறனை மேம் படுத்தும் விதமாக வாசிப்பு மாரத்தான் எனும் செயலியை தமிழ அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த வாசிப்பு மாரத்தான் என்ற தலைப்பிலான வாசிப்பு இயக்கம் நேற்று தொடங்கி வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்துக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த த்தின் ஒரு பகுதியாக இந்த வாசிப்பு மாரத்தான் நடத்தப்படுகிறது. அதன் படி அனைத்து இல்லம் தேடி கல்வி மையங்களிலும் தன்னார்வாலர்களின் செல்போன் வழியாக கூகுள் ரீட் அலாங் செயலியை பயன்படுத்தி மாணவர்கள் படிக்கும் வகையில் இந்த வாசிப்பு மராத்தான் திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செயிலியின் சிறப்பு

இச்செயலியில் 100 வார்த்தைகளைக் கொண்ட குறுங்கதைகளில் தொடங்கி 400 வார்த்தைகள் வரையிலான கதைகள் வரை 4 நிலைகளில் வாசிப்புக்கான பக்கங்கள் வடிவமைக்கப்படுள்ளன. வாசிப்பின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் கதையோடு ஓவியங்களும் இந்தப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த தகவல்கள் குழந்தைகளின் வாசிப்புத்திறன்களை மதிப்பிடவும் அதற்கேற்ப இனிவரும் காலத்தில் கற்பித்தல் உத்திகளை மேம் படுத்தவும் உதவியாக இருக்கும். தமிழ் ஆங்கில வார்த்தைகளை குழந்தைகள் சரியாக உச்சரிக்கவும், வாசிப்பு ப்பிழைகளைச் சரி செய்து கொள்ளவும் இந்த இயக்கம் நிச்சயம் உதவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், அதனடிப்படையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 3597 மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மையங்களில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக தினமும் மாலை 5 மணி முதல் 6.30 வரை இந்த வாசிப்புமராத்தான் பயிற்சி செயலி மூலம் வாசிப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும விதமாக நடைப்பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அனைவரும் தினமும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையங்களுக்கு அனைவரும் வருகை தந்து கற்றல் திறனையும் வாசிப்பு திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தன்னார்வலர்கள் பயிற்சிக் கையேடு, கற்றல் அட்டை, நூலக புத்தகம் ஆகியவற்றை இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி, உதவித் திட்ட அலுவலர் சிவசக்தி கணேஷ்குமார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்படபலர் கலந்துக்கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here