மீஞ்சூர், மே. 27 –
மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, அகில இந்திய அளவில் நடைப்பெற்றக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
திருவெள்ளைவாயிலைச் சேர்ந்தவர் வடிவேலு. மாலதி தம்பதியர் இவர்களுக்கு யுவஸ்ரீ மற்றும் குணஸ்ரீ என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
வடிவேலுக்கு சிறுவயது முதலே குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவராய் இருந்துள்ளார். ஆனால் அவரால் குத்துச்சண்டை வீரராக ஆக முடியவில்லை. இந்நிலையில் தனக்கு பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளை நினைத்து அவர் வருத்தப்படவில்லை. மாறாக தனது இரு மகள்களையும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூத்த மகளை கபடி போட்டியில் வீரர் ஆக்கினார். தனது இரண்டாவது மகளை எப்படியாவது குத்துச்சண்டை வீரராக ஆக்க வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்துள்ளது.
அதன் விளைவாக மீஞ்சூரில் இருக்கும் குகன் என்ற பயிற்சியாளர் இடத்தில் மூன்று வருடத்துக்கு முன்னால் தன் இளைய மகளை குத்துச்சண்டை பயிற்சி வகுப்பில் சேர்த்துவுள்ளார்.
மகள் குணஸ்ரீ குத்துச்சண்டையில் பல்வேறு நுணுக்கங்களை மிகவும் லாவகமாக கற்று தேர்ந்து இதுவரை 18 தங்க பதக்கங்களையும் ஒரு வெள்ளி பதக்கத்தையும் அகில இந்திய அளவில் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 19-2022 ஆம் தேதியிலிருந்து இருபத்தாறாம் தேதி வரை கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடந்த அகில இந்திய குத்துச்சண்டையில் பெண்கள் பிரிவில் அரசுப்பள்ளி மாணவி குணஸ்ரீ 5 மாநிலங்களை சேர்ந்த பெண் வீராங்கனைகள் அடித்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
மேலும் குணஸ்ரீ மீஞ்சூரை அடுத்த காட்டூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி இவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது அப்பாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து விட்டோமே என்று அவர் வருத்தப்படாத அளவிற்கு இரண்டு பெண்களையும் விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்து விட்டு அவர்கள் இருவரும் பெரிய அளவில் சாதித்துக் காட்டும் அளவிற்கு அவர்களை அத்துறையில் சிறந்து விளங்க அவர்களுக்கு பயிற்சி வகுப்பிகளில் சேர்த்து விட்டு வறுமையிலும் பெறுமைக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
மேலும் அகில இந்திய அளவில் வெள்ளப்பதக்கம் வென்ற குணஸ்ரீ கூறும் பொழுது தான் வாங்கிய பதக்கங்களிலேயே நேற்று வாங்கிய பதக்கம் வெள்ளிப்பதக்கம் மீதமுள்ள அனைத்துமே தங்கப்பதக்கம். இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலும் அகில உலக அளவிலும் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக தான் குத்துச்சண்டையில் சிறந்த வீராங்கனையாக வருவேன் என்று தெரிவித்தார்.