மீஞ்சூர், மே. 19 –
திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன். பொன்ராஜா .மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி. அறங்காவலர் சுப்பிரமணி. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் .துணை தலைவர் அலெக்சாண்டர் .தொழிலதிபர் தமிழ்உதயன் .உள்ளிட்டவர்கர்களோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது.
நகரத்தின் முக்கிய வீதிகளில் பகவான் வரதராஜ பெருமாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தகோடிகள் கோவிந்தா கோவிந்தா என விண்ணை முட்ட முழங்க முறையாக தெருவலம் வந்து இறுதி எல்லை வந்துச் சேர்ந்தது, இறைவன் அமர்ந்து வந்து வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்திலான தேர்…
இத்திருவிழாவை காண 30 கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பலர் பங்குபெற்றனர் அவர்களுக்கு நகரத்தின் முக்கிய பொறுப்பாளர்களும் வேண்டுதல் குறித்து பக்தர்களும் பொதுமக்களுக்கு அன்னதானம். குளிர்பானம். மோர். உள்ளிட்ட அனைத்து விதமான ஆகாரங்களை பிரசாதமாக வழங்கினார்கள்.



















