சேலம், மே. 16 –

சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர்  சந்திரசேகர் என்பவர் சாலை ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த பணி ஆணை வழங்கிட ரூ. 3. இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், வீரகனூரை சேர்ந்த சோமு என்பவரின் மகன் சுந்தரராஜன் என்பவர் மாநில அளவிலான சாலை பணிகளை எடுத்து கடந்த 2013 ஆண்டு முதல் செய்து வருகிறார்.

இந்நிலையில், சேலம் வட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் திடாவூர் முதல் தம்மம்பட்டி வரையில் 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்து இரண்டு வழிச்சாலையாக அமைத்திடவும் மேலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் இத்துடன் 9 பணிகளுக்கான பணி ஆணை வழங்குவது தொடர்பாக ஒப்பந்ததாரர் சுந்தரராஜனிடம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர் சந்திர சேகர் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்தப் பணத்தை கொடுக்க மனமில்லாததால் அவர் சேலம் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகாரளித்து சந்திரசேகர் மீது நடவடிக்கைக் எடுக்க கோரியுள்ளார் அப்புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து பொறிவைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர் ஒப்பந்ததாரர் சுந்தரராஜனிடம் இருந்து சந்திரசேகர் ரூ.3.5 லட்சம் பணத்தை கேட்டுப் பெறும் போது அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் கைது செய்து அவர் மீது தொடர் சட்டநடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here