பெருவாயல், மே.04 –
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் அருகேவுள்ள டி ஜே எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6- ஆம் ஆண்டு விழாவும் அதில் யுகேஜி மற்றும் முதல் வகுப்பு படித்த 120 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்விக் குழுமத்தின் தலைவரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் மேலாண்மை இயக்குனரும் செயலாளருமான ஆறுமுகம், பள்ளியின் தாளாளர் பழனி, கல்வி குழுமத்தில் இயக்குனர் ஜி. தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஞானப்பிரகாசம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீதேவி கலைக் கல்லூரியின் முதல்வர் லட்சுமிபதி .விஜய் டிவி புகழ். நடிகர் தாடி பாலாஜி.உள்ளிட்டோர்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் நன்றியுரை வழங்கினார்.





















