பொன்னேரி, ஏப். 28 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இலவச நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் வழங்குதல்,மக்கள் பதிவு,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்குதல், தாய் சேய் நலம், தடுப்பூசி சேவைகள், காச நோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனை, காது மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நல்வாழ்விற்கான யோகா மற்றும் தியானம், காணொளி மூலமாக மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ சேவைகள் இம்முகாமில் வழங்கப்பட்டது.

மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவகர்லால் தலைமையும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை ‌சந்திரசேகர் முன்னிலையும் வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன். கிராம ஊராட்சி ரவி, மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு, துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் மற்றும் திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் காட்டுப்பள்ளி முனுசாமி, ஜலந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு முகமதுதாரிக். கொண்டக்கரை ஜெயப்பிரகாஷ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கர். உள்ளிட்ட திரளான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் .அரசு துறை அதிகாரிகள். வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here