திருவள்ளூர், ஏப். 25 –

நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி குறைந்தப்பட்ச ஆதாரவிலையில் கிலோ ஒன்றிற்கு ரூ. 72.75 கொள்முதல் செய்ய அரசாணை வெளியடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடப்பு ஆண்டில் 2021-22 பச்சை பயிறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பச்சை பயிறுக்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் ( எஃப்.ஏ.ஓ ) நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின்படி கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 என்ற விலைக்கு மத்திய அரசு நிறவனமான ( என்எஃப்இடி ) நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய சடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 100 மெ.டன் வீதம் 300 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மே 15 – 2022 வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக் கணக்கு, நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழுடன் திருவள்ளூர் செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்குடங்களில் பதிவு செய்துக் கொண்டு பயன்பெறலாம். விளைப்பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் மேலும், கூடுதல் விவரங்களுக்கு செயலாளர் காஞ்சிபுரம் விற்பனைக்குழு, ஒழுங்குமறை விற்பனைக்கூடம் மேற்பார்வையாளர் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகியோரை அணுகவும்.

விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க தமிழ அரசு மேற்கொண்ட இம்முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here