மீஞ்சூர், ஏப். 24 –

இன்று தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்த சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

அதன் ஒருபகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அதில் குறிப்பாக அத்திப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு கிராம சபையில் .முக்கியமான மன்ற கோரிக்கையாக அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் புதிய குடியிருப்புகளுக்கு பூர்விகமான பட்டாக்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் சேர்ப்பது, தரமான குடிநீர் வழங்குவது. உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுப்போன்று, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு இடங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும். தெரு விளக்குகள் அமைத்து தரக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கல்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற பிரியங்கா துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களின் கோரிக்கைகளையும் மின்சாரம். குடிநீர் .மின் விளக்குகள். உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி நிலவழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு வருகை புரிந்த பொது மக்களின் தேவைகளை அறிந்து இந்தியன் வங்கி சார்பில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது .மேலும் கிராமத்தில் உள்ளவர்கள் வரிகள் செலுத்துவதற்கு எளியமுறையில்  கணினியில் பதிவிறக்கம் செய்து தரப்படும் என தீர்மானிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் சாலைகள். குடிநீர். மின் விளக்குகள் .அமைத்து தரக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் புதிய குழாய் இணைப்பு வழங்கியதால் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்  .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here